அழகிப்போட்டியில் பரிசு வென்ற இரண்டு அழகிகள் திருமணம்: வைரல் புகைப்படம்

அழகிப்போட்டியில் பரிசு வென்ற இரண்டு அழகிகள் திருமணம்: வைரல் புகைப்படம்

அழகிப் போட்டியில் பரிசு வென்ற 2 அழகிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மிஸ் கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் பரிசு வென்ற அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும், மிஸ் போர்ட்டோ ரிககோ பேபியோலாவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இருவரும் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது ஒருவரை ஒருவர் சந்திக்க தொடங்கினார்கள் என்றும், அதன் பின் அவர்களது நட்பையும் தாண்டி ஒருவரை ஒருவர் விரும்ப தொடங்கினார்கள் என்றும் தெரிகிறது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தங்கள் உறவை ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது பகிரங்கமாக திருமணம் செய்துள்ளனர். திருமணம் அக்டோபர் 28-ஆம் தேதி இந்த திருமணம் நடந்துள்ள நிலையில் இருவரும் திருமண உடையில் திருமண பதிவு அலுவலகத்தில் வெளியே போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

CATEGORIES
Share This

COMMENTS