ரணிலிற்கு ஆபத்தாகும் மகிந்தவின் நகர்வு! களத்தில் அரச புலனாய்வு

ரணிலிற்கு ஆபத்தாகும் மகிந்தவின் நகர்வு! களத்தில் அரச புலனாய்வு

மொட்டு கட்சிக்கும் ரணிலுக்கும் இடையில் பிளவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.அவ்வாறான வாய்ப்பு உருவாகும் போது இந்த ஆட்சி கவிழக்கூடிய நிலை ஏற்படும் என புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுகின்றது.இதனால் அவரால் முன்வைக்கப்படும் எந்த பிரேரணையும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆனால் தற்போது மகிந்தவும் ஒரு காய் நகர்த்துகின்றார். அதாவது இரண்டு தம்பிமார்களையும் விலக்கும் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளார்.இப்போது அவர் தனி ஆளாக உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்தவிற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது. அதற்கு காரணம் அவர் போரை வெற்றிக் கொண்டவர்.அந்த வெற்றி மாயை முடிந்தாலும் அதனை ஓரளவிற்கு புதுப்பிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே மொட்டு கட்சி மக்கள் மத்தியிலிருந்து முற்றுமுழுதாக தூக்கி எரியப்பட்டதாக நாங்கள் பார்க்க மாட்டோம்.மொட்டு கட்சி நாடாளுமன்றில் இருப்பதால் ரணிலுக்கும் இவருக்கும் இடையில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு என கூறியுள்ளார்.

 

CATEGORIES
Share This