கொழும்பில் மாபெரும் போராட்டம் – இலங்கை வர்த்தக சம்மேளனம் கவலை

கொழும்பில் மாபெரும் போராட்டம் – இலங்கை வர்த்தக சம்மேளனம் கவலை

இலங்கை வர்த்தக சம்மேளனம் உட்பட பல வர்த்தக சம்மேளனங்கள், இன்று (02.10.2022) முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டங்களுக்கு சில அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கவலை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த போராட்டங்களை கைவிடுமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை அங்கீகரித்துள்ள இந்த சம்மேளனங்கள், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையிலான எதிர்ப்புகளை கைவிடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளன.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பல்

இந்த நேரத்தில் நடைபெறும் எந்த ஒரு ஸ்திரமற்ற செயலும், இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெற எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக தடம் புரளச் செய்யும் என்று வணிக சம்மேளனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க சில விமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

சுற்றுலா பயணிகளின் வருகை
குளிர்காலத்தில் ஐரோப்பாவில் ஏற்படும் அதிக எரிசக்தி செலவினங்களை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றலாத்துறைக்கு புத்துயிரை வழங்கும். எனினும் இன்றைய போராட்டம், ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கான மீட்பு செயல்முறையை பாதிக்கலாம் என்று சம்மேளனங்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS