ஸ்தம்பிக்கவுள்ள தென்னிலங்கை – போராட்டக்காரர்களுடன் இணைந்த சரத் பொன்சேகா

ஸ்தம்பிக்கவுள்ள தென்னிலங்கை – போராட்டக்காரர்களுடன் இணைந்த சரத் பொன்சேகா

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

மருதானையில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு வரும் மக்கள் இந்த நிலையில் இந்த மாபெரும் போராட்டத்தில் இணைவதற்காக கொழும்பு நோக்கி வரும் பேரணியில் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இணைந்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS