குறைந்த மதிப்பெண்கள் கொடுத்ததால் ஆசிரியரைக் கொன்ற பதின்ம வயதினர்

குறைந்த மதிப்பெண்கள் கொடுத்ததால் ஆசிரியரைக் கொன்ற பதின்ம வயதினர்

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் பதின்ம வயதுடைய இருவர் குறைந்த மதிப்பெண்களால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக தங்கள் ஆசிரியரைக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லர்ட் மில்லர் (Willard Miller), ஜெரமி கூடெல் (Jeremy Goodale) ஆகிய இருவர் மீதும் தங்கள் பள்ளியில் ஸ்பானிய மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் நொஹிமா கிராபரைக் (Nohema Graber) கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிராபரின் சடலம் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.

அப்போது மில்லருக்கும் கூடெலுக்கும் 16 வயது.

ஆசிரியர் கிராபரின் வகுப்பில் கிடைத்த குறைந்த மதிப்பெண் தமது மொத்த மதிப்பெண்ணைக் குறைத்ததாகக் காவல்துறை விசாரணையில் மில்லர் கூறினார்.

பதின்ம வயதினர் இருவரும் பெரியவர்களாக வழக்கு விசாரணையில் கருதப்படுவர்.

அயோவா மாநிலத்தில் கொலைக்குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

வழக்கு விசாரணை தொடர்கிறது.

CATEGORIES
Share This

COMMENTS