புத்திசாலிகள், படித்தவர்கள் என கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து கவலை – நாமல்

புத்திசாலிகள், படித்தவர்கள் என கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து கவலை – நாமல்

புத்திசாலிகள், படித்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள் குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டுவது குறித்து தான் வருத்தமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமனவின் கருத்துக்கு பதிலளித்த அவர், சன்ன ஜயசுமன தனது முந்தைய அறிக்கையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்று முன்னறிவித்துள்ளார். அவர் கட்சியை விட்டுவெளியேறியதால், இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது வெளிப்படையானது என்று கூறியுள்ளார்.

இந்த யோசனைகளை நாம் விமர்சிக்காமல் மக்களின் பக்கம் நின்று தீர்மானங்களை எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This