பௌத்த கொடியை பிடுங்கி எறிவோம்! முடிந்தால் சுட்டுத் தள்ளுங்கள்..! யாழில் வெடித்த சர்ச்சை

யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக நேற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் இந்தப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மாவீரர் மாதம் ஆரம்பித்துள்ள நிலையில், கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அங்கிருக்கும் படையினரோ தாம் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டுவதற்கு முற்பட்டனர்.
இதன்போதே குழப்ப நிலை தோன்றியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES பிரதான செய்திகள்