ஜே.ஆர்.இளமையில் நாட்டின் தலைவராகி இருந்தால் இலங்கை செல்வந்த நாடு-பெல்பொல விபஸ்சி

தொலைநோக்கு பார்வைக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன இளம் வயதில் நாட்டின் தலைவராக பதவிக்கு வந்திருந்தால், இலங்கை தற்போது செல்வந்த நாடாக மாறியிருக்கும் என கோட்டே விகாரை தரப்பின் ஆவண காப்பாளரும் ஜப்பானுக்கான பிரதான சங்க நாயக்கருமான பெல்பொல விபஸ்சி தேரர் தெரிவித்துள்ளார்.
ஜே.ஆரின் காரியத்தை நிறைவேற்றும் பலம் ரணிலுக்கு இருக்கின்றது
அப்படியான காரியத்தை தற்போது நிறைவேற்றக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் கூறியுள்ளார். ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இரத்த உறவு இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்த பலம் இருக்கின்றது.
இவர்கள் அரசியலில் எதனையும் சம்பாதிக்கவில்லை. தமது சொத்துக்களைக் கூட பொது மக்களுக்கு அர்ப்பணித்தவர்கள்.மக்கள் சரியான தலைமைத்துவத்தை அடையாளம் காணாத காரணத்தினால், நாடு தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
வாழும் போது பெறுமதி புரியவதில்லை
வாழும் போது மக்களின் பெறுமதி பலருக்கு புரியவதில்லை.புத்த பகவான் உட்பட பல மகான்கள் வாழும் போது அவர்களின் பெறுமதி எவருக்கும் புரியவில்லை. அதுபோலவே ஜே.ஆர். ஜெயவர்தன வாழும் போது அவரது பெறுமதி எவருக்கும் புரியவில்லை.
இலங்கையில் அனைத்து தலைவர்களுக்கு சிலைகளை நிர்மாணித்தனர். ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு சிலை அமைக்கவில்லை எனவும் விபஸ்சி தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.