சஜித்திற்கு தலைமைப்பண்பு இல்லை – போட்டு தாக்குகிறார் முன்னாள் சகா

சஜித்திற்கு தலைமைப்பண்பு இல்லை – போட்டு தாக்குகிறார் முன்னாள் சகா

சஜித் பிரேமதாசவுக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் அந்த குணங்களை அவரால் காட்ட முடிந்திருந்தால் இன்று நாட்டின் அதிபராக அவர் இருந்திருப்பார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்னர் சஜித்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருந்து தற்போது அதிபர் ரணிலுடன் ஐக்கியமாகி சுற்றுலாத்துறை அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுற்றுலாத் துறைக்கு இடையூறு

அத்துடன் நாளையதினம் இடம்பெறவுள்ள போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொண்டால் அது சுற்றுலாத் துறைக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

மீண்டும் தரைமட்டமாக்க வேண்டாம்

மேலும் நாட்டில் சுற்றுலாத்துறை தற்போது வளர்ச்சியடைந்து வருவதாகவும் அதனை மீண்டும் தரைமட்டமாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்தார்.

CATEGORIES
Share This