எமனாக மாறிய ஜோசியம்..? காதலனை கொல்ல உதவிய குடும்பம்?

எமனாக மாறிய ஜோசியம்..? காதலனை கொல்ல உதவிய குடும்பம்?

கேரளாவில் ஜோசியத்தை நம்பி காதலனை காதலியே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு காதலியின் குடும்பம் உடந்தையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த கிரீஷ்மாவும், ஷரோன்ராஜ் என்ற நபரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் ஷரோன்ராஜ் உடல்நலம் பாதித்து உயிரிழந்தார். விசாரணையில் அவரது காதலி கிரீஷ்மா அவருக்கு கஷாயத்தில் விஷத்தை கலந்து கொடுத்ததாக தெரிய வந்தது.

இதுதொடர்பான விசாரணையின்போது கிரீஷ்மா பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அதிர்ச்சிகரமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷரோன்ராஜை காதலித்து வந்த கிரீஷ்மாவுக்கு வேறு ஒரு பையனுடன் நிச்சயம் நடந்ததாக கூறப்படுகிறது. கிரீஷ்மாவின் ஜாதகத்தில் முதல் கணவன் அல்ப ஆயுசில் இறந்துவிடுவார் என்று இருந்ததால் வீட்டில் பார்த்தை பையனை திருமணம் செய்யும் முன்னதாக, ஷரோன்ராஜை வர செய்து ரகசிய திருமணம் செய்து பின்னர் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுள்ளார் கிரீஷ்மா.

ரகசிய திருமணத்திற்காக ஷரோன்ராஜ் கிரீஷ்மாவின் வீட்டுக்கு வந்தபோது கிரீஷ்மாவின் தாயார் இது தெரிந்துமே திட்டமிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கிரீஷ்மாவின் தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குடும்பமே திட்டமிட்டு இந்த கொலையை நடத்தியதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

CATEGORIES
Share This

COMMENTS