அரசியல் செய்ய முடியாத நிலையில் பசில் தாய்நாட்டை நோக்கிப் பறந்துவிட்டார் : உதய கம்மன்பில

அரசியல் செய்ய முடியாத நிலையில் பசில் தாய்நாட்டை நோக்கிப் பறந்துவிட்டார் : உதய கம்மன்பில

அரசியல் செய்ய முடியாததால் பசில் ராஜபக்ச தனது தாய்நாட்டை நோக்கிப் பறந்துவிட்டார்.

இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சிதறு தேங்காய் உடைப்பது போல சிதறியுள்ளது என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிதறியுள்ளதால், அதிருப்தி நிலையில் உள்ளவர்கள் எம்முடன் இணைவார்கள்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்

இந்நிலையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காக்க நாம் எதையும் செய்வோம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

மக்கள் ஆணையைக் காக்கவே நாம் அமைச்சுப் பதவிகளை இழந்தோம். மாறாக சலுகைகளுக்காக அரசியல் நடத்துவது கிடையாது என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS