மனித தலையுடன் சாலையில் உலா வந்த நாய்: “அடுத்த தலை உங்களது தான்” என்ற வாசகத்தால் மக்கள் அச்சம்

மனித தலையுடன் சாலையில் உலா வந்த நாய்: “அடுத்த தலை உங்களது தான்” என்ற வாசகத்தால் மக்கள் அச்சம்

அமெரிக்காவில் மெக்சிகோவில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் ஒரு நாய் துண்டிக்கப்பட்ட தலையுடன் வாயில் கவ்வியபடி சுற்று திரிந்தது. இதனை கண்ட மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றனர். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தெருநாய் சடலத்தின் தலையை கழுத்தில் பிடித்துக்கொண்டு தெருக்களில் ஓடுவதைக் காட்டுகிறது. கறி என நினைத்து அதனை சாப்பிடுவதற்கு எங்காவது எடுத்துச் செல்லலாம் என சுற்றி திரிந்துள்ளது.

மெக்சிகோவின் வடக்கே உள்ள ஜாகேட்டிகேஸ் என்ற மாகாணத்தில் குற்றம் நடந்த இடத்தில் இருந்து மனித தலையை நாய் எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. துண்டாக்கப்பட்ட தலையானது மான்டே எஸ்கோபெடோ நகரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் “அடுத்த தலை உன்னுடையது” என்று எழுதப்பட்ட வாசகம் எச்சரிக்கைப் பலகையுடன் தொடங்கவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், போதைப்பொருள் ஆசாமிகள் அதிகாரிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் இது போன்றவற்றை செய்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS