உடல் எடையைக் கடகடவென குறைக்க வேண்டுமா? கற்றாழையும் தேனும் போதுமாம்

உடல் எடையைக் கடகடவென குறைக்க வேண்டுமா? கற்றாழையும் தேனும் போதுமாம்

கற்றாழையில் பல மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ள என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

கற்றாழை நமது சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பல வழிகளில் உதவுகிறது.

இந்த கற்றாழையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன.

இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுகின்றது.இதனை ஒரு சில பொருட்களுடன் எடுத்து கொண்டாலே போதும்.

தற்போது அதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

எப்படி எடுத்து கொள்ளலாம்?
கற்றாழை ஜெல்லை காய்கறி சாறுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லதுடன், எடையை குறைக்க உதவுகின்றது.

உணவுக்கு முன் கற்றாழை சாற்றை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் கற்றாழையை எடுத்துக்கொள்வது செரிமான அமைப்புக்கு உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

தினமும் ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையை குறைக்கலாம்.

கற்றாழை சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து எடுத்து கொள்வது நல்லது. இது எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்த உதவுகிறது. எலுமிச்சை சாறையும் கற்றாழை சாறையும் கலந்து குடித்த பிறகு ஒரு மணி நேரத்துக்கு வேறு எதையும் குடிக்க கூடாது.

கற்றாழை சாற்றுடன் சில துளிகள் தேன் கலந்து குடிப்பது நல்லது. இது அதன் சுவை கூடும். இது எடை குறைக்க உதவுகின்றது.

குறிப்பு
எடை இழப்புக்கு வெறும் கற்றாழையை மட்டுமே பயன்படுத்த விரும்பினால் கற்றாழையின் மஞ்சள் நிற திரவத்தை வெளியேற்றி விட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை மட்டும் எடுத்து நன்றாக கழுவிய பின்பு அதனை அரைத்து அதன் சாறை வடிகட்டி குடிக்கவும்.

இதை கண்ணாடி பாட்டிலில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தவும். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இதை தயாரித்து வைத்து பயன்படுத்தலாம்.

CATEGORIES
Share This

COMMENTS