துறவரம் பூணுவதற்காக சென்ற சிறுவன் விகாரையில் தூக்கிட்டு தற்கொலை

துறவரம் பூணுவதற்காக சென்ற சிறுவன் விகாரையில் தூக்கிட்டு தற்கொலை

துறவரம் பூணுவதற்காக பௌத்த விகாரைக்கு சென்ற சிறுவன், 40 நாட்களுக்கு பின்னர், விகாரையின் களஞ்சிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடந்துள்ளது.

விகாரையில் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியிருந்த சிறுவன்

துறவரம் பூணுவதற்காக மில்லனிய லெனவர ராஜமஹா விகாரையில் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியிருந்த 12 வயதான சிறுவனின் உடல் விகாரையின் களஞ்சிய அறையில் காவி துணியில் தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த 28 ஆம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பண்டாரகம, வீதியாகொட பிரதேசத்தை சேர்ந்த யேசித் கிமிஹான வீரசிங்க என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது விருப்பத்திற்கு அமைய பெற்றோரின் அனுமதியுடன் 40 நாட்களுக்கு முன்னர் விகாரைக்கு சென்று ஆரம்ப சடங்குகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

விகாரையில் தங்கியிருந்த சிறுவனை நேற்று முன்தினம் விகாரையில் இருக்கவில்லை என்பதால், சிறுவனை தேடியுள்ளனர்.

காவி துணியின் உதவியுடன் தூக்கிட்டு தற்கொலை

அப்போது சிறுவன் களஞ்சிய அறையில் காவி துணியின் உதவியுடன் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த தேவகேவின் ஆலோசனைக்கு அமைய மில்லனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS