25 வருட மேல்நீதிமன்ற வரலாற்றில் நீதிபதி இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு

25 வருட மேல்நீதிமன்ற வரலாற்றில் நீதிபதி இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி புதன் கிழமை அன்று, போட்டியின்றி ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

முதலாவது தமிழர் என்ற பெருமை
குறித்த தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

நீதித்துறையில் கடந்த 25 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியன் பணியாற்றி வருகின்றார்.

இவர் மேல் நீதிமன்ற நிதிபதியாக வடக்கு – கிழக்கின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.

திருகோணமலையில் ஏழரை வருடங்கள், கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள், யாழ்ப்பாணத்தில் மூன்றரை ஆண்டுகள், வவுனியா ஓராண்டு, மட்டக்களப்பு சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றில் ஓராண்டு என மொத்த 12 ஆண்டுகள் மேல் நீதிமன்றில் கடமையாற்றுகிறார்.

CATEGORIES
Share This

COMMENTS