மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க 43 ஆம் படையணி தீர்மானம் !

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க 43 ஆம் படையணி தீர்மானம் !

எதிர்வரும் 02 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணி தீர்மானித்துள்ளது.

ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் தலைமையகத்தில் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியான பொலிஸ் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS