4 மணிநேரமாக ரிப்ளை வரல… ட்ரோன் அனுப்பி கண்காணித்த தோழி… சீனாவில் நடந்த சுவாரஸ்யம்!

4 மணிநேரமாக ரிப்ளை வரல… ட்ரோன் அனுப்பி கண்காணித்த தோழி… சீனாவில் நடந்த சுவாரஸ்யம்!

ஃப்ரண்ட்ஷிப் கோல்ஸ் என்ற பேரில் எக்கச்சக்கமான வீடியோக்கள், பதிவுகள் சமூக வலைதளங்கள் மூலம் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில், தன்னுடைய மெசேஜிற்கு ரிப்ளை செய்யாததால் தோழியின் வீட்டுக்கு பெண் ஒருவர் ட்ரோன் அனுப்பிய நிகழ்வு சீனாவில் நடந்திருக்கிறது.

வான் என்ற பெண் அண்மையில் இதயப் பிரச்சனையால் அவதிப்பட்டதால் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். அதன் காரணமாக தனது தோழிக்கு கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று காலை 7 மணியளவில் சீனாவின் we chat செயலியில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

அப்போது வானிடம் அவரது தோழி அருகே இருக்கும் க்ளினிக் சென்று டெஸ்ட் எடுத்து பரிசோதிக்கும்படி கூறியிருக்கிறார். அதன் பிறகு வான் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்ததால் அவரது தோழி பல மணிநேரமாக அவருக்கு ஏராளமான மெசேஜ் அனுப்பியும் கால் செய்தும் எடுக்காமல் போயிருக்கிறார்.

அதில், “என்ன செய்கியார்?”, “உனக்கு என்ன ஆனது?”, “நிறைய முறை உனக்கு கால் செய்தேன். ஏன் எடுக்கவில்லை?” என்றும் வானிற்கு மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கிறது. இப்படி பல முறை தொடர்பு கொண்டும் வானிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அந்த தோழி தன்னுடைய கணவரிடம் இருந்த ட்ரோனை வான் இருக்கும் இடத்துக்கு பறக்கச் செய்திருக்கிறார்.

வானின் வீட்டுக்கும், அந்த தோழியின் வீட்டுக்கும் குறுகிய தொலைவே இருந்ததால் ட்ரோன் வானின் வீட்டை அடைய வெகுநேரம் எடுக்கவில்லை. அதன் பிறகு வான் வீட்டு ஜன்னல் வழியே ட்ரோன் வந்ததும் அவர் ஆச்சர்யமடைந்திருக்கிறார்.

இது தொடர்பாக ஸ்டார் வீடியோ வெப்சைட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் ஐந்து ஆண்டுகளாக நட்புறவில் இருந்து வருகிறோம். அவர்கள் எனக்கு பலமுறை உதவியாக இருந்திருக்கிறார்கள். சமயங்களில் எனக்காக சுவையான உணவுகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

எனக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் என் தோழி கவலையுற்றிருக்கிறார். அதனால்தான் ட்ரோனை அனுப்பியிருக்கிறார். இது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது” என வான் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து தன் தோழியை கண்காணிக்க ட்ரோன் அனுப்பிய நிகழ்வு குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவவே, “உங்களுக்கு மிகவும் உற்ற நண்பர் கிடைத்திருக்கிறார்.” என்றும், “இப்படியான நண்பர் இருக்கும் போது உங்களுக்கு எந்த கவலையும் கஷ்டமும் இருக்காது என நினைக்கிறேன்” என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.

CATEGORIES
Share This