யால சம்பவத்துடன் அமைச்சரொருவரின் மகனுக்கு தொடர்பா..! மஹிந்த அமரவீரவின் தகவல்

யால சம்பவத்துடன் அமைச்சரொருவரின் மகனுக்கு தொடர்பா..! மஹிந்த அமரவீரவின் தகவல்

யால வன விலங்கு சரணாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தமது மகனுக்கு தொடர்பு கிடையாது என விவசாய மற்றும் வனஜீவராசி வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யால வன விலங்கு சரணாலய சம்பவம்
அண்மையில் யால வன விலங்கு சரணாலயத்தில் ஜீப் வண்டிகளில் சிலர் மோசமாக நடந்து கொண்டதாகவும், இது வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலானது எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தமது மகனுக்கு தொடர்பு உண்டு என செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மீறிச் செயற்பட்டவர்களுக்கு தண்டனை
சட்டத்தை மீறிச் செயற்பட்டவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் எனைய ஊடகங்களிலும் தகவல்கள் வெளியிடப்படுவது நல்ல விடயம் என்ற போதிலும் சம்பந்தம் இல்லாதவர்களை தொடர்புபடுத்துவது பிழையானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS