கொழுப்பை கரைக்கும் வாழைப்பூ துவையல் – 5 நிமிடத்தில் செய்து அசத்தலாம்

கொழுப்பை கரைக்கும் வாழைப்பூ துவையல் – 5 நிமிடத்தில் செய்து அசத்தலாம்

எடையை குறைக்கும் உணவுகளில் வாழைப்பூ முதலிடத்தில் உள்ளது.

வாழைப்பூவில் பல ஆரோக்கியமான உணவுகளை செய்து ருசிக்கலாம்.

இன்று நாம் வாழைப்பூ துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாழைப்பூ துவையல் செய்ய தேவையான பொருட்கள்
வாழைப்பூ – 1
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 4
துருவிய தேங்காய் – கால் கப்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
செய்முறை
வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.

அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.

இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

CATEGORIES
Share This

COMMENTS