கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் அழைத்து வரப்பட்ட பிரமுகர்! பொலிஸார் குவிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் பிரமுகர் ஒருவர் உலங்குவானூர்தியில் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசேட பாதுகாப்புடன் குறித்த பிரமுகர் உலங்குவானூர்தியில் அழைத்துச்செல்லப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (28) காலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் வேறு வைத்தியசாலைகளின் விசேட வைத்தியர்களின் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
இந்த விசேட பிரமுகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு அப்பால் எவ்வித பதிவுகளும் இன்றி அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இவருக்கு சிகிச்சையளிப்பதற்காக வெவ்வேறு வைத்தியசாலைகளிலிருந்து விசேட வைத்தியர்கள் குழுவொன்று அழைத்து வரப்பட்டு சிக்கிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
பிரமுகர் தொடர்பில் வெளியான தகவல்
குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த பிரமுகர் தொடர்பில் தகவல் திரட்டிய சிங்கள ஊடமொன்று முன்னாள் கடற்படைத்தளபதி ஒருவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.