மூன்றாக பிளவடைந்த மஹிந்த அணியினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதன் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான குழு என இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கட்சிக்குள் பிளவு
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் குழு ஒன்றும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர சாகர காரியவசத்தின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
CATEGORIES பிரதான செய்திகள்