உலகத்திற்கு பேரழிவாகப் போகும் எதிர்வரும் வாரங்கள்:அதிர்ச்சித் தகவல்கள் பல!

உலகத்திற்கு பேரழிவாகப் போகும் எதிர்வரும் வாரங்கள்:அதிர்ச்சித் தகவல்கள் பல!

உக்கிரமடையும் உக்ரைன்-ரஷ்ய போரில் யாதாயினும் ஒரு நாடு அணுவாயுதத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாக பிரித்தானியாவை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,”கடந்த வாரம் அமெரிக்கா அணு ஆயுத பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதற்கு பின்னர் தற்போது ரஷ்யா அணு ஆயுத பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதனை அமெரிக்காவிற்கும் அறிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணைகள் மற்றுமன்றி விமானங்களும் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணம் கடந்த வாரம், உக்ரைன் அணு ஆயுத வெடிப்பொன்றை செய்ய போகின்றது என ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் கூறி இருந்தார்.

அவ்வாறு அணு குண்டை வெடிக்க வைத்தால் அதன் பின் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். எனவே உடனடியாக அதனை தடுத்து நிறுத்துங்கள் என கூறி இருந்தார்.

இது தொடர்பில் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சரும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சரும் இரு தடவைகள் தொலைபேசியில் பேசி இருந்தனர்.”என கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS