உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – நீதிமன்றில் மனு தாக்கல்!

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – நீதிமன்றில் மனு தாக்கல்!

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என முடிவெடுக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னணி தனியார் நிறுவனமொன்றின் பொது முகாமையாளரால் உயர் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை நீக்க வேண்டும் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற வேண்டும் என கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS