உலக வர்த்தக மையத்தையும் ஏமாற்றிய திலினி பிரியமாலி

உலக வர்த்தக மையத்தையும் ஏமாற்றிய திலினி பிரியமாலி

பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி, உலக வர்த்தக மையத்தில் தனது அலுவலகம் இயங்கி வந்த கட்டடத்திற்கான வாடகையை 8 மாதங்களாக செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

34வது மாடியில் உள்ள அலுவலகத்தின் வாடகை 16 லட்சம் ரூபாய். அதன்படி 08 மாதங்களுக்கான வாடகை 128 இலட்சம் ரூபாவாகும்.

எட்டு மாதங்களாக செலுத்தப்படாத வாடகை

உலக வர்த்தக மைய கட்டடத்தின் 34வது மாடியை அலுவலகம் நடத்த கொடுத்தபோது 12 மாதங்கள் வைப்புத்தொகை வைக்கப்பட்டதால் உலக வர்த்தக மைய நிர்வாகத்திற்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கதிர்காமத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் பல தடவைகள் விஜயம் செய்துள்ள திலினி ஒரு தடவைக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் ஆரம்பம்

திலினி பிரியமாலியின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தின் கீழ் விசாரணைப் பிரிவொன்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS