நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க யாழிற்கு பயணம்!

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க யாழிற்கு பயணம்!

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ‘பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்’ என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளார்.

நாட்டின் முதல் பெண்மணியான மைத்திரி விக்ரமசிங்க, களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியென்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS