கோட்டாபயவை சந்தித்த ஜனாதிபதி-புதிய நியமனங்கள் பற்றியும் பேச்சு

கோட்டாபயவை சந்தித்த ஜனாதிபதி-புதிய நியமனங்கள் பற்றியும் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

சந்திப்பின் நோக்கம்

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெற்றுக்கொள்ள கோட்டாபய ராஜபக்சவின் மத்தியஸ்தத்தை பெறும் நோக்கில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

பாதுகாப்பு பிரதானிகளின் நியமனங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

குறிப்பாக பாதுகாப்பு பிரதானிகள் ஓய்வுபெறுவது மற்றும் புதிய நியமனங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக அவரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS