தெற்காசியாவைச் சேர்ந்தவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமை – ரிஷி சுனக்கிற்கு சந்திரிக்கா வாழ்த்து!

தெற்காசியாவைச் சேர்ந்தவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமை – ரிஷி சுனக்கிற்கு சந்திரிக்கா வாழ்த்து!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கன்சர்வேடிவ் கட்சித் தலைமை மற்றும் பிரித்தானியாவின் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ரிஷி சுனக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுனக்கின் வெற்றி தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். ஏனெனில் இது பிரித்தானியாவில் ஜனநாயக நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS