உகாண்டாவில் பரவுது எபோலா வைரஸ்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா தலைநகர் கம்பாலாவில் 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். புதிதாக நேற்று 9 பேருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
கடந்த 2 நாளில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசிகளையும் அரசு செலுத்தி வருகிறது.
உகாண்டாவில் செப். 20ல் எபோலா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES செய்திகள்