2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இன்று – இலங்கை மக்களுக்கு தென்படும் நேரம் குறித்த அறிவிப்பு

2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இன்று – இலங்கை மக்களுக்கு தென்படும் நேரம் குறித்த அறிவிப்பு

2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காணமுடியுமென ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இது இலங்கைக்கு பகுதி சூரிய கிரகணமாக தோன்றும் என அந்த மையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பகுதியில் முழுமையாகக் காணக்கூடிய இதனை 22 நிமிடங்களுக்குப் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரையான காலப்பகுதியில் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் எனவும் ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

சூரிய கிரகணத்தின் அதிகபட்ச கிரகணம் மாலை 5.49 மணிக்கு ஏற்பட்டு மாலை 6.20 மணிக்கு முடிவடைகிறதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சூரியன் அஸ்தமனத்திற்கு அருகில் இருப்பதாலும் சூரியனின் முகம் சந்திரனால் மறைக்கப்படாததாலும் இந்த சூரிய கிரகணம் இலங்கை மக்களுக்கு குறைவாகவே தெரியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் மேலும் தெரிவித்துள்ளது

CATEGORIES
Share This

COMMENTS