எஞ்சியுள்ள நாமல் ராஜபக்சவும் துரத்தப்படுவார் – சஜித் தரப்பு விளாசல்

எஞ்சியுள்ள நாமல் ராஜபக்சவும் துரத்தப்படுவார் – சஜித் தரப்பு விளாசல்

மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மற்றும் பசில் ராஜபக்ச,என ராஜபக்ச தொடர்புகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தற்போது நாமல் ராஜபக்ச மாத்திரமே நீக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச பிரதமரான பின்னர்

அடுத்த தேர்தலில் சஜித் பிரேமதாச நாட்டின் பிரதமரான பின்னர் நாமல் ராஜபக்சவும் நீக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS