அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் மூலம் சிறைக்கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது – அம்பிகா சற்குணநாதன்

சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய விதிமுறைகள் தொடர்பில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில் தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்ப்பதற்கான அனுமதியை வாரத்தில் ஆறுநாட்கள் என்பதிலிருந்து ஒரு நாளிற்கு குறைப்பது என்ற விதிமுறை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சிறைக்கூண்டிற்குள் இருக்கவேண்டிய நேரத்தை நாளொன்றிற்கு 23 மணித்தியாலங்களாக அதிகரிப்பது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துதோடு சிறைச்சாலை உணவுகளை உண்ணமுடியாத நிலையும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES செய்திகள்