மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தெரிவு !

மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தெரிவு !

ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாவோ சேதுங்கிற்குப் பின்னர் நாட்டில் அதிக காலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஜின்பிங் பெற்றுள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இன்று அதன் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங்கை ஐந்தாண்டு காலத்திற்கு தெரிவு செய்துள்ளது.

சீனப் பொருளாதாரத்திற்கு அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜி ஜின்பிங் தனது பதவிக்காலத்தில் தாய்வானை சீனாவின் நிலப்பரப்புடன் இணைப்போம் என்ற பிரசாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This