மகிந்தவை கைவிட்டு ரணிலின் பக்கம் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மகிந்தவை கைவிட்டு ரணிலின் பக்கம் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போது நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த புதிய கூட்டணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கம்பஹா, காலி, பொலன்னறுவை, பதுளை, கேகாலை போன்ற மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற முறையில் தேர்தல் தொகுதிகளை பெற்றுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This