ஓடும் பேருந்தில் யுவதியை வெட்டிக் காயப்படுத்திய இளைஞன் – யாழ்-வவுனியா பேருந்தில் பரபரப்பு!

ஓடும் பேருந்தில் யுவதியை வெட்டிக் காயப்படுத்திய இளைஞன் – யாழ்-வவுனியா பேருந்தில் பரபரப்பு!

பேருந்தில் பயணித்த யுவதி ஒருவரை சக பயணி ஒருவர் பிளேடால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்திலேயே இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில், சன நெரிசலில் இளைஞன் ஒருவர் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காவல்துறையில் ஒப்படைப்பு

அதனையடுத்து யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை சக பயணிகள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர்.

CATEGORIES
Share This