பார்ப்பதற்கு மிகவும் சிறியது ஆனால் இதன் பயன்கள் பெரியதா…?

பார்ப்பதற்கு மிகவும் சிறியது ஆனால் இதன் பயன்கள் பெரியதா…?

சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களில் வளர்வதை ஆனைச்சுண்டைகாய் அல்லது பால் சுண்டைகாய் என்றும் கூறுவார்கள். பார்ப்பதற்கு மிகவும் சிறிய அளவினில் காணப்படும் இந்த சுண்டைகாயில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

சுண்டைக்காய்க்கு கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி போன்ற பெயர்களும் உண்டு. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நன்கு காயவைத்த சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல் போன்ரவை நீங்கும். சுண்டைக்காயை பருப்புடனும் சேர்த்தும் சமைக்கலாம் அல்லது வத்த குழம்பாகவும் செய்து சாப்பிடலாம்.

சுண்டைக்காயை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகளை போக்குவதோடு வயிற்றுப் புழுக்கள், குடற்புண்கள் ஆகியவற்றை வெளியேற்றும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டுமுறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் நல்லது.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி, சுண்டைகாய் வற்றல் செய்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் தணியும். இந்த நோயினால் வரக்கூடிய உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல், கை கால் நடுக்கம், மயக்கம் முதலியவற்றை நீக்கக்கூடிய சக்தி இதில் உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS