🛑 19 தமிழ் எம்.பிக்கள் ’22’ இற்கு ஆதரவாக வாக்களிப்பு! – 9 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை!!

🛑 19 தமிழ் எம்.பிக்கள் ’22’ இற்கு ஆதரவாக வாக்களிப்பு! – 9 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை!!

9 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர்
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 9 எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எதிரணி பக்கம் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் 22 இற்கு ஆதரவு வழங்கின. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரேயொரு தமிழ் எம்.பியான வடிவேல் சுரேஷ், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினரான அங்கஜன் ஆகியோரும் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை. அரச பங்காளிக்கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பன ’22’ இற்கு ஆதரவாக வாக்களித்தன.

9 ஆவது நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தலில் மக்களின் அங்கீகாரத்துடன் 25 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர், தேசியப்பட்டியல் ஊடாகவும் மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை விவரம்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10
தமிழ் முற்போக்கு கூட்டணி – 05
தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 02
ஈ.பி.டி.பி. – 02
தமிழ் மக்கள் தேசிய முன்னணி – 01
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01
சுதந்திரக்கட்சி – 01
ஐக்கிய மக்கள் சக்தி – 01
இதொகா – 02
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 02

22 இற்கு ஆதரவாக வாக்களித்த எம்.பிக்கள்

(தமிழ் முற்போக்கு கூட்டணி)
1. மனோ கணேசன்
2. பழனி திகாம்பரம்
3. வே. இராதாகிருஷ்ணன்
4.எம். உதயகுமார்
(இதொகா)
5. ஜீவன் தொண்டமான்
6.மருதபாண்டி ராமேஸ்வரன்
7.அ. அரவிந்தகுமார் -(ஆளுங்கட்சி)

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

8. செல்வம் அடைக்கலநாதன்
9. தர்மலிங்கம் சித்தார்த்தன்
10. சிவஞானம் சிறிதரன்
11. சார்ள்ஸ் நிர்மலநாதன்
12. கோவிந்தன் கருணாகரம்
13. தவராசா கலையரசன்

(ஆளுங்கட்சி)
14. சுரேன் ராகவன்
15. சதாசிவம் வியாழேந்திரன்

(ஈபிடிபி)
16. டக்ளஸ் தேவானந்தா
17. கு. திலீபன்

18. சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

19. சி.வி. விக்னேஸ்வரன் – தமிழ் மக்கள் தேசிய முன்னணி

22 மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.பிக்கள்

1.இரா. சம்பந்தன்
2.சுமந்திரன்
3.சாணக்கியன்
4.எஸ்.வினோநோகராதலிங்கம்
5.வடிவேல் சுரேஷ்
6.வேலுகுமார்
7.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
8.செல்வராசா கஜேந்திரன்
9.அங்கஜன் ராமநாதன்

சுகயீனம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால்தான் பங்கேற்கவில்லை என மேற்படி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This