கடல்வழியாக யாழிற்கு கடத்திவரப்பட்ட 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகள் மீட்பு!

கடல்வழியாக யாழிற்கு கடத்திவரப்பட்ட 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகள் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை நேற்று (வியாழக்கிழமை) கடற்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவுற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்துவைகக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை மீட்டனர்.

இதேவேளை இந்த தீவில் மனிதர்கள் வாழுவதில்லை எனவும் அங்கு இந்தியாவில் இருந்து கடல்வழியாக இந்த வெடி பொருட்களை கொண்டுவராப்பட்டு மறைத்துவைக்கப்பட்ட நிலையில் கடற்படையினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
Share This

COMMENTS