யாழ் நூலகத்தை எரித்தவர் இனவாதி காமினி திசாநாயக்கவே..! நாடளுமன்றில் தர்க்கம்

யாழ் நூலகத்தை எரித்தவர் இனவாதி காமினி திசாநாயக்கவே..! நாடளுமன்றில் தர்க்கம்

காமினி திசாநாயக்க ஒரு இனவாதி என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்து இருந்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இலங்கை அரசியல்வாதிகளின் இனவாதம் மதவாதம் தொடர்பில் காரசாரமாக பேசுகையில் சிறில்மத்யூ ஒரு இனவாதி… லலித் அத்துலத் ஒரு இனவாதி… பிரேமதாச ஒரு இனவாதி…. காமினி திசாநாயக்க ஒரு இனவாதி… எனக் கூறினார்.

யாழ் நூலகத்தை எரித்த காமினி திசநாயக்க

இதன்போது சபைக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்த காமினி திசநாயக்க மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயந்த திசாநாயக்க குறுக்கிட்டு காமினி திசநாயக்க இனவாதி அல்ல என்றார்.

காமினி திசநாயக்க இனவாத வெறி பிடித்தவர் என்பதால் தான் யாழ் நூலகத்தை எரித்தார். இதனை உங்களால் மறுக்க முடியுமா என சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து உங்களுக்கு உரையாற்றும் நேரம் முடிவடைந்துவிட்டது பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என மயந்த திசாநாயக்க கூறினார்.

சிறிதரன் விடாப்பிடி

எனினும் சிறிதரன் தொடர்ந்தும் பேசுகையில், “உறுப்பினரே பொய் பேச வேண்டாம் தவறான கருத்தை கூற வேண்டாம் எனது தந்தை காமினி திசநாயக்க இனவாதி அல்ல என மீண்டும் மயந்த திசாநாயக்க கூறினார்.

“இல்லை உங்கள் தந்தை ஒரு இனவாதி தான்” என சிறிதரன் விடாப்பிடியாக நிற்க உங்கள் நேரம் முடிவடைந்துவிட்டது பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என மயந்த திசாநாயக்க கூறினார்.

“சபைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நீங்கள் தந்தையை போல செயல்படுகிறீர்கள் எனது நேரத்தை நீங்கள் எடுத்தீர்கள் அதனால் எனக்கு இரண்டு நிமிடங்கள் வேண்டும்” எனக்கூறி தனது பேச்சை தொடர்ந்தார்

CATEGORIES
Share This

COMMENTS