சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற படகுகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவை சென்றடைய சுமார் 21 நாட்கள் ஆகும் என்றும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்

CATEGORIES
Share This

COMMENTS