சீன அதிபர் சி ஜின்பிங் நாட்டின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு

சீன அதிபர் சி ஜின்பிங் நாட்டின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு

சீன அதிபர் சி ஜின்பிங் (Xi Jinping) நாட்டின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிபர் சி ஜின்பிங் (Xi Jinping) நாட்டின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசத் தந்தை மா சே துங்கிற்குப் (Mao Zedong) பிறகு ஆக வலிமையான தலைவராக அவர் அறிவிக்கப்படலாம்.

அவர் மிக அரிதாக மூன்றாவது தவணையாகச் சீனாவின் அதிபர் பொறுப்பை ஏற்கப் போகிறார்.

அதோடு அவருக்கு அதிகாரபூர்வமாக ‘மக்கள் தலைவர்’ என்ற பட்டமும் வழங்கப்படவிருக்கிறது.

அவர் ‘மக்கள் தலைவர்’ என்றே சீன அரசாங்க ஊடகங்களிலும் அதிகாரிகள் மத்தியிலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

அந்தப் பட்டம் விரைவில் அதிகாரபூர்வமாகப் போகிறது.

1978ஆம் ஆண்டுக்குப் பிந்தியச் சீன வரலாற்றில் மிகப்பெரிய தலைவராக திரு. சி அங்கீகரிக்கப்படவிருக்கிறார்.

சீனாவில் ‘தலைவர்’ என்ற பட்டம் காலஞ்சென்ற தேசத் தந்தை மா சே துங்கை மட்டுமே குறித்துவந்தது.

CATEGORIES
Share This

COMMENTS