சில நாடுகளின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயற்படும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை – அலி சப்ரி

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் நடத்தையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கையின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்மைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய அவர், மனித உரிமைகள் பேரவையின் இந்த நடவடிக்கை அரசியல் பின்புலத்தை கொண்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை சில நாடுகளின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மீறல்கள் தொடர்பாக, உள்ளக பொறிமுறை ஊடான விசாரணையையே அவசியம் என்றும் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இலங்கை மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.