கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க பெண் செய்த செயல்! என்ன செய்தார் தெரியுமா?

கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க பெண் செய்த செயல்! என்ன செய்தார் தெரியுமா?

30 வருடமாக சிறுகச் சிறுக சேமித்த ரூ.2 கோடியைச் ரெனாட்டா என்ற பெண், மூழ்கிய டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க செலவிட்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டைட்டானிக் என்ற கப்பல் கடலில் முழ்கியது, அந்த சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட டைட்டானிக் என்ற படம் 1997-ம் ஆண்டு வெளியாகி மெக ஹிட்டானது. இந்த படத்தை பார்த்த எல்லோருக்குமே அந்த கப்பலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும்.

அப்படி தான் அமெரிக்காவைச் சேர்ந்த ரெனாட்டாவுக்கும் தோன்றி இருக்கிறது. ஆனால், எல்லோரையும் போல, ரெனாட்டா அந்த எண்ணத்தை கடந்து செல்லவில்லை. எப்படியாவது கடலில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் சென்று பார்த்தாக வேண்டும் என்ற உறுதியுடன் இருந்திருக்கிறார். அதற்காக 30 வருடமாக சிறுகச் சிறுக ரூ.2 கோடியைச் சேமித்து, தற்போது தன் ஆசையைத் நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.

ரெனாட்டா எப்படி இந்த ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் தெரியுமா?

5 பேர் செல்லக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலில் சென்று கடலுக்கடியில் சிதைந்து கிடந்த டைட்டானிக் கப்பலை நேரில் பார்த்துள்ளார். ரெனாட்டாவின் குழுவில் இருந்தவர்களும் தலா ரூ.2 கோடியை செலவு செய்துள்ளனர்.

இதை பற்றி ரெனாட்டா கூறியிருப்பது , ‘’ நான் டைட்டானிக் படம் பார்த்ததிலிருந்தே அந்த கப்பலைக் கண்டுபிடிக்க ஆசைப்பட்டேன். ஆனா, அப்போது டைட்டானிக் கப்பல் இருந்த இடத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் முதலில் அந்தக் கப்பலைக் கண்டுபிடிக்க முடிவு எடுத்து பல வழிகளில் விசாரித்தேன், புத்தகங்கள் படித்தேன். அப்படி இருக்கும் சமயத்தில் தான் டைட்டானிக் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது, நான் கல்லூரி சேர்ந்திருத்தேன். அந்த செய்தியை பார்த்ததும், நான் தேடி அலைந்தது வீண்ணாகி போயிவிட்டதே என்று நெருங்கிவிட்டேன். அதுக்கு அப்பறம் ஒரு வங்கியில் பணிபுரிந்தேன். அப்போது தான் சரி சிதைந்த டைட்டானிக் கப்பலை என் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து அதற்காக பணம் சேமித்தேன். இப்போ என் கனவு நிறைவேறி விட்டது‘’ என்றுள்ளார்.

CATEGORIES
Share This