யாழில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்: 25 வயது இளைஞன் தலைமறைவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையான 25 வயது இளைஞனால் 15 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இளைஞன் தற்போது தலைமறைவாகியுள்ளார் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவி, மேற்படி இளைஞனை காதலித்து வந்தார் எனவும் உயிர்கொல்லி ஹெரோயின் பாவனைக்கு இளைஞன் அடிமையான பின்னர் இளைஞனுடனான தொடர்புகளைத் துண்டித்துவிட்டதாகவும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை, பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது சகோதரியும் தனியார் கல்வி நிறுவன வகுப்பு முடிவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, சந்தேகநபர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.
அவரைத் தூக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டு, பின்னர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது சகோதரியும் சென்றுள்ளனர்.
இதன்போது ஆள்நடமாட்டம் அற்ற பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றினுள் பாதிக்கப்பட்ட மாணவியை சந்தேக நபர் இழுத்துச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரி, ஊரவர்களையும் உறவினர்களையும் உடனடியாக சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.