சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கும் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியை கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி நிராகரிப்பு!

யாழ் மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்த நிலமானது தற்போது எத்தகைய பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாத நிலையில் உள்ளது. குறித்த ஆதனத்தில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் உள்ள பொதுமக்களிற்கு நீர் விநியோகம் செய்கின்ற கிணறுகள் அமைந்துள்ளன.
எதிர்வரும் காலங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாநகர சபைக்குற்பட்ட பகுதிகளிற்கு நீர் விநியோகப் பணி ஆரம்பிக்கப்பட இருப்பதைக் கருத்திற் கொண்டு குறித்த நீர் விநியோகத்திற்கு எவ்வித பங்கமேற்படாதவாறு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றினை குறித்த ஆதனத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக சபையின் அனுமதியினை மாநகர முதல்வர் அவர்கள் கோரியிருந்தார். குறித்த அனுமதியினை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன கூட்டாக இணைந்து மறுத்துவிட்டன.
CATEGORIES செய்திகள்