உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி : விவசாயத்தில் ஈடுபடும் இராணுவம்

உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி : விவசாயத்தில் ஈடுபடும் இராணுவம்

யாழ்.குடாநாட்டில் 1,614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் சில இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இம்மாதம் ஜனாதிபதி ரணில் இரத்து செய்திருந்தார்.

இந்நிலையில் யாழில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலை சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் குறுக்கே எல்லைகளை இட்டு, அதன் ஊடாக இராணுவத்தினர் வீதிகளை அமைத்துள்ளனர்.

மேலும் வளமான செம்மண் நிலங்களை தங்களுக்குச் சொந்தமானதாகக் கருதி விவசாயம் செய்து வருகின்றனர் என புகைப்படத்தை வெளியிட்டு சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS