ஜி ஜின்பிங் போட்ட பெரும் திட்டம் – சீனாவில் பரபரப்பு நிலை

ஜி ஜின்பிங் போட்ட பெரும் திட்டம் – சீனாவில் பரபரப்பு நிலை

கொவிட் – 19 தொற்றை பூஜ்ஜியமாக பேணும் தனது சர்ச்சைக்குரிய கொள்கையை சீன அதிபர் ஜி ஜின்பிங் நியாயப்படுத்தியுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் சந்திப்பு தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் பல தசாப்த கால பாரம்பரியத்தை உடைத்து, காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக கட்சியின் தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதில் உரையாற்றிய ஜி ஜன்பிங், பூஜ்ஜிய கொவிட் – 19 கொள்கை என்பது, வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான அனைத்து மக்களின் போர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிபர் பதவி

சீனாவில் அதிபருக்கு அதிகபட்ச வயது என்று எதுவும் இல்லை. ஒருவர் இரு முறை தான் அதிபராக இருக்க வேண்டும் என்ற விதியும் 2018இல் சத்தமில்லாமல் நீக்கப்பட்டது. பல ஆண்டுகளாகவே அங்கு எந்தவொரு தலைவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் தொடர்ந்தது இல்லை.

இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 10 ஆண்டுகளுக்குப் பின் அதிபர் பதவியில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள். அப்படி 2012 இல் அதிபராக இருந்த ஹு ஜிண்டாவோ தனது பதவியை ராஜினாமா செய்ததால் தான் ஜி ஜின்பிங்கிற்கு அதிபர் பதவி கிடைத்தது.

ஜி ஜின்பிங்கின் ஆதிக்கம்

இருப்பினும், 69 வயதான ஜி ஜின்பிங் இப்போதைக்கு அதிபர் பதவியில் இருந்து ஒதுங்குவதாகத் தெரியவில்லை. அவர் அதிபரானது முதலே கட்சியில் செல்வாக்கை அதிகரித்தார். தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை அளித்த அவர், தன்னை எதிர்ப்பவர்களை ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் கட்சியில் இருந்தே தூக்கிவிட்டார்.

இப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அவருக்கு எதிராக யாரும் இல்லை என்பதால் ஜி ஜின்பிங் அதிபராவதை எதிர்க்க யாரும் இல்லை என்றே கூறலாம்.

ஜி ஜின்பிங்கின் திட்டம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரைத் தலைவர் பதவி என்பது 1982இல் நீக்கப்பட்டது. கட்சியைத் தாண்டி எந்தவொரு நபரும் வரக் கூடாது என்பதால் இந்தப் பதவி நீக்கப்பட்டது.

சீனாவின் தந்தை எனப்படும் மாவோ வகித்த பதவி இது. இப்போது பொதுச்செயலாளராக இருக்கும் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டில் மீண்டும் தலைவர் பதவியை உருவாக்கி, அந்த பதவியை அடையத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் உயிரிழக்கும் வரை அவரால் அதிபராக இருக்க முடியும் என கூறப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS