கொழும்பில் வீதியில் கதறியழும் தாய்மார்கள்! சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணையை கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான தாய்மார்கள் கலந்து கொண்டு கதறியழுத வண்ணம் பல்வேறு கோசங்களை எழுப்பி தமது கோரிக்கையை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS