இலங்கையில் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிப்பு! பூச்சியியல் குழு வெளியிட்ட தகவல்

இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பு இனத்தை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் குழு கண்டுபிடித்துள்ளது.
இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நுளம்பு இனம் நோய் பரப்புமா இல்லையா என்பது இன்னும் ஆராய்ச்சி மட்டத்தில் இருப்பதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
வேறு நாடுகளிலும் பதிவு
மேலும், இந்த நுளம்பினமானது தற்போது தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES செய்திகள்