ஊழலுக்கு எதிரான சட்ட மூல நடைமுறை – இலங்கையின் முயற்சிகளுக்கு பாராட்டு

இலங்கையில் ஊழலுக்கு எதிரான சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஊழலுக்கு எதிரான சட்ட மூலமானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினை மேம்படுத்த தேவைப்படும் பல சட்ட ஏற்பாடுகளை அல்லது விதிகளைக் கொண்டுள்ளது என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பொதுமக்களின் கருத்துக்கள் இதுவரை இணைக்கப்படவில்லை என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறித்த சட்ட மூலத்தின் முக்கிய விபரங்கள் மற்றும் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்களின் தலையீட்டுக்கு மிகக்குறைந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு உடனடியாக கொண்டு வரவுள்ளமை தொடர்பில் அந்த நிறுவனம் கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நிலவுகின்ற ஊழல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதை பாராட்டும் அதேவேளை,
தற்போதைய நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான சட்டங்கள் இலங்கையில் போதியளவு காணப்படுவதாகவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் குறிப்பிடுகிறது.