போராட்டத்தில் இரண்டு லட்சம் பேரே கலந்துக்கொண்டனர்:அதனை கண்டு நாம் அஞ்சினோம்-சாகர காரியவசம்

போராட்டத்தில் இரண்டு லட்சம் பேரே கலந்துக்கொண்டனர்:அதனை கண்டு நாம் அஞ்சினோம்-சாகர காரியவசம்

கொழும்பு காலிமுகத்திடலை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இரண்டு லட்சம் பேருக்கும் குறைவானவர்களே பங்கேற்றிருந்தனர் என்பதை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினரின் புள்ளிவிபரங்கள்

சில வாரங்களுக்கு முன்னர் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, போராட்டம் குறித்து நாடடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவல்களை வெளியிட்டார். புலனாய்வுப் பிரிவினரின் புள்ளவிபரங்களுக்கு அமைய போராட்டத்தில் இரண்டு லட்சம் பேருக்கும் குறைவானவர்களே கலந்துக்கொண்டுள்ளனர்.

அதற்கு அஞ்சு நாங்கள் ஒரு அடியை பின்நோக்கி வைத்தோம். அச்சம் கொண்டவர்கள் சுயாதீனமாக மாறினர். இவர்களில் சுயாதீனமாக மாறியமைக்கு பின்னால் இருப்பது அச்சமல்ல, ஒரு சதித்திட்டம் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This

COMMENTS